Header

Sri Lanka Army

Defender of the Nation

05th July 2018 11:52:59 Hours

யாழ்ப்பாணத்தில் படையினர் மனித திசு நன்கொடைகள் நிகழ்ச்சி திட்டம்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக ஏற்பாட்டில் இலங்கை இராணுவ படையினர்கள், அண்மையில் பொசன் தினத்தை முன்னிட்டு, மனிதவள திசுக்களை பயண்படுத்தி நன்கொடை வழங்கும் கருத் திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது ஏற்பாட்டில் இலங்கை கண் நன்கொடைச் சங்கத்தின் அனுசரனையுடன் (27) ஆம் திகதி பருத்தித்துறை பகுதியில் உள்ள வறிய குடும்பத்தைச் சேர்ந்த குடும்ப அங்கத்தவர்கள் 1500 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் விநியோகிக்கப்பட்டன.

மேலும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இலங்கை கண் நன்கொடை சங்கத்திற்கு மனித உடமைகளை நன்கொடையாக வழங்குவதற்கு 10,000 க்கும் மேற்பட்ட இராணுவப் படையினர்கள் முன்வந்துள்ளனர். இவற்றில் எலும்பு சிப்ஸ், அம்மியோடிக் சவ்வுகள், மற்றும் மண்டை ஓடுகள் ஆகியவற்றை சேகரிக்கும் திட்டத்திலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிகளுக்கு 650 க்கும் அதிகமான இராணுவ படையினர் இலங்கை கண் நன்கொடை சங்கத்துடன் இச்சந்தர்ப்பத்தில் இனைவதாக கையொப்பமிட்டனர். அதன்பிறகு அவர்களது மனித திசுக்களை தானம் செய்ய முன்வந்தனர். யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சில மாதங்களுக்குள், உன்னதமான திட்டத்திற்கு வடக்கில் பணியாற்றும் இராணுவத்தினர் 10,000 க்கும் மேற்பட்டவர்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

இலங்கை கண் நன்கொடை சங்கத்தினால், எலும்பு முனைகள், இடுப்பு மூட்டுகள், மண்டை ஓடுகள் மற்றும் வெவ்வேறு எலும்புகள் போன்ற உறுப்புகள் வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்பட்டு, விபத்துகளால் ஏற்படுகின்ற காயத்தின் போது, உயிர் பிழைக்ககூடிய வழிமுறைகளை மேற்கொள்கின்றனர்.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் இச் சந்தர்ப்பத்தில் முதல் படிவத்தை கையொப்பமிட்டு இந்த திட்டத்திற்கான தொண்டர்களை சேகரிக்கும் நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பி வைத்தார்.

Running Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov