Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd July 2018 14:26:40 Hours

கிளிநொச்சி பிரதேசத்தில் இராணுவத்தினரால் சிரமதான பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 65, 651, 652 ஆவது படைத் தலைமையகங்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பிரதேசங்களில் ஜூலை (29) ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

651 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 11 ஆவது கஜபா படையணியின் பங்களிப்புடன் காரியலானகப்பாடுவன் கால்வாய் பகுதிகளில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

652 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 7 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் பங்களிப்புடன் அக்கராயன்குளம் பிள்ளையார் கோயில் வளாகத்தில் சிரமதான பணிகள் இடம்பெற்றன.

இந்த சிரமதான பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

buy footwear | Nike