03rd July 2018 12:05:02 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55 ஆவது படைப் பிரிவிற்குரிய 551 ஆவது படைத் தலைமையகத்திற்கு புதிய படைத் தளபதியாக கேர்ணல் அசங்க பெரேரா அவர்கள் யாழ்ப்பாண பருத்திதுரை பிரதேசத்தில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் தனது பதவியை உத்தியோகபூர்வமாக (2) ஆம் திகதி திங்கட் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை இராணுவ சம்பிரதாய முறைப்படி 18 ஆவது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் வரவேற்கப்பட்டார்.
பின்பு படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றன. அதனை தொடர்ந்து பௌத்த சமய ஆசிர்வாத நிகழ்வு இடம்பெற்றன. பின்னர் உத்தியோகபூரவமாக கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.
இறுதியில் படையினருக்கு மத்தியில் உரையை படைத் தளபதி நிகழ்த்தினார்.
short url link | NIKE HOMME