Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd July 2018 16:49:15 Hours

கடந்தபோர் வீரர்களின் சந்ததியினர் மற்றும் தடகள வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வைப்பு

இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களினால் போர்க்களத்தில் நினைவிழந்த போர் வீரர்களை நினைவு கூறியும் தேசிய மற்றும் சர்வதேச புகழ்பெற்ற தடகள வீரர் , வீராங்கனைகளை ஊக்குவிக்கும் முகமாக நிதி நன்கொடைகள் இராணுவ தலைமையகத்தில் வைத்து படையினரின் குடும்ப அங்கத்தவர்கள், விளையாட்டு வீரர் , வீராங்கனைகளுக்கு (2) ஆம் திகதி திங்கட் கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை இலேசாயுத காலாட் படையில் சேவையாற்றிய கேர்ணல் எச். டப்ள்யூ ஹேவாராச்சி அவர்கள் எல்டிடிஈ பயங்கரவாத தாக்குதலின் போது ஆனையிறவு பிரதேசத்தில் வைத்து 2000 ஆம் ஆண்டு நாட்டிற்காக தமது உயிரை அர்ப்பணித்தார். அவரது மகளான சேனாலி ஹரித்மா ஹேவாராச்சி அவர்களுக்கு படையினரது குடும்பங்களுக்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் இராணுவ தளபதியினால் நிதியுதவி நன்கொடையாக வழங்கப்பட்டது.

பின்பு இராணுவ தளபதி மகள் மற்றும் தாயுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். இராணுவ குடும்ப அங்கத்தவர்களது நலன் கருதி உறவினர்களிடையே தாராள மனப்பான்மையைக் கொண்டிருந்த இராணுவத் தளபதி, அமெரிக்க வெளிநாட்டு வான்வெல்விலில், திட்டத்தின் COMMON BOND 201 இல் கலந்துகொள்ள வெளிநாட்டு விமான பயணத்திற்கு ரூ 421,370 / = நிதியையும் பரிசாக வழங்கி வைத்தார். மேலும் அமெரிக்காவில் ஜூலை 28 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 5 ஆம் திகதி வரைக்கும் இடம்பெறவிருக்கும் பயிற்சி பட்டறைகளில் பங்கேற்றிக் கொள்வதற்காகவும் இந்த இராணுவ அதிகாரியின் மகளுக்கு சந்தர்ப்பத்தையும் வழங்கி வைத்தார்.

பாதுகாப்பு மற்றும் விவகார பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.என். வடுஹொடபிட்டிய, காலஞ்சென்ற கேர்ணல் ஹேவாரச்சி அவர்களின் மனைவியும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டனர்.

அண்மையில், அவுஸ்திரேலியா கோஸ்ட்டில் இடம் பெற்ற பொதுநலவாய போட்டிகளில் ஆண்களுக்கான எடை தூக்கும் போட்டிகளில் பங்கேற்றி வெண்கல பதக்கங்களை வென்ற 4 ஆவது கொமாண்டோ படையணியைச் சேர்ந்த சாஜன் ஜே.ஏ.சி லக்மால் அவர்களுக்கு அவரது வீட்டு கட்டிட நிர்மான பணிகளுக்காக இராணுவ தளபதியினால் 12 இலட்சம் ரூபாய் நிதியாக வழங்கப்பட்டது. மேலும் கொமாண்டோ படையணியினால் 3 இலட்சம் ரூபாய் நன்கொடை நிதியாக வழங்கப்பட்டது.

இலங்கை இராணுவ மகளிர் அணியின் போர் வீராங்கனை எஸ். கமபதிரன, அவர்கள் பாதுகாப்பு சேவை விளையாட்டுகள் மற்றும் படையணிகளுக்கு இடையிலான போட்டிகளில் பங்கு பற்றி தனது திறமைகளை வெளிக்காட்டியுள்ளார். இவரது சேவையை பாராட்டி இவருக்கு அவரது வீடு நிர்மானிப்பதற்காக 12 இலட்சம் ரூபாய் இராணுவ தளபதியினால் வழங்கப்பட்டது. மேலும் இவரது படையணியினால் 3 இலட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.

கொமாண்டோ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா, பாதுகாப்பு மற்றும் விவகார பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.என். வடுஹொடபிட்டிய , இராணுவ பட்டாலியன் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட கேர்ணல் லலித் வீரகோன் அவர்கள் இச்சந்தர்ப்பத்தில் இணைந்திருந்தனர்.jordan Sneakers | NIKE HOMME