02nd July 2018 15:50:04 Hours
பயங்கரவாத யுத்தத்தின் போது படையினரால் பாதுகாப்பு பங்கர்களில் முன்வைக்கப்பட்ட கவிதைகளை உள்ளடக்கி ‘பங்கர் குருடு கீ’ எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி கொழும்பு 2 இல் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை கல்லூரியில் (30) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.
ஆர்யா அறக்கட்டளையின் அனுசரனையில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளின் போது பங்கர்களில் முன்வைத்த கவிதைகள் இந்த கண்காட்சிகளில் பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்டிருந்தன.
மே மாதம் 2009 க்கு முன்னர், மனிதாபிமான நடவடிக்கைகளின் போது ஈடுபட்ட இராணுவத்தினரால்பதுங்கு குழிகள் மற்றும் கடமை புரிந்த இடங்களிலிருந்து சேர்க்கப்பட்ட கவிதைகளே இந்த கண்காட்சிகளிலே வைக்கப்பட்டிருந்தன.
நாட்டின் பாதுகாப்பிற்காக உயர்மட்ட தியாகத்தைச் செய்த வீரர்களுக்காக நாட்டின் இறையான்மையை பாதுகாக்கும் படையினரது சேவையை கௌரவித்து இந்த கண்காட்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டன.
இந்த கண்காட்சிக்கு முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள்,பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
best Running shoes brand | UK Trainer News & Releases