01st July 2018 19:18:40 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 122 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 6 ஆவது பொறியியலாளர் படையணியினால் கதிர்காமத்திற்கு செல்லும் பாதயாத்திரைகளின் நன்மை கருதி கடுப்பிலையிலிருந்து யாலைக்கு செல்லும்பாதைகளில் ஆற்றுக்கு மேலாக புதிதாக பாலம் அமைக்கப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது எண்ணக்கருவிற்கமைய பாதயாத்திரைகளுக்குசெல்லும்பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள், அம்புலன்ஸ் வண்டிகள் செல்வதற்காக இந்த பக்தர்களது நலன்புரி நிமித்தம் இந்த தற்காலிக பாலம் அமைக்கப்பட்டன.
இரண்டு மாத காலத்திற்கு முன்பிருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த பாதயாத்திரைகள் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் , கிரிந்த பிரதேசங்களிலிருந்து கதிர்காம யாத்திரைக்கு வருகை தந்த பக்தர்களுக்காக இந்த பாலம் அமைக்கப்பட்டன.
Sneakers Store | Nike for Men