Header

Sri Lanka Army

Defender of the Nation

01st July 2018 14:48:01 Hours

இராணுவ தளபதியின் பங்களிப்புடன் இடம்பெற்ற பொசன் தின நிகழ்வு

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களின் பங்களிப்புடன அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் பௌத்த சமய ஆசிர்வாத பூஜைகள் (29) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி அவர்கள் வருகை தந்தார். இவரை 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் வரவேற்றார்.

பொசன் தின பௌத்த சமய ஆசிர்வாத பூஜைகள் மதிப்புக்குரிய சுசீம தேரர் அவர்களினால் இடம்பெற்றன. அச்சமயத்தில் அந்த பூஜைகளில் பயங்கரவாத யுத்தத்தின் போது நாட்டிற்காக உயர் தியாகம் செய்த படை வீரர்களையும் நினைவு படுத்தி அவர்களின் ஆத்மா சாந்தியடையவும் இடம்பெற்றன.

buy footwear | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp