Header

Sri Lanka Army

Defender of the Nation

26th June 2018 21:43:38 Hours

மூதூரில் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு பணிகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22, 224 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு பணிகள் மூதூர் பிரதேசத்தில் (23) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றன.

இந்த டெங்கு ஒழிப்பு பணிகளுக்கு 24 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த 50 இராணுவத்தினரும், 25 பொலிஸார் மற்றும் 25 பொது சுகாதார பரிசோதகர்களின் பங்களிப்புடன் 24 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை தளபதியான மேஜர் எம்.ஏ.சி.பி மாரசிங்க அவர்களது கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றன.

இவை அனைத்தும் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது எண்ணக்கருவிற்கமைய இடம்பெற்றன.

இந்த பணிகள் காலை 8.00 மணி தொடக்கம் 224 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி கேர்ணல் ஈ.ஏ.பி எதிரிவீர, சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் ஜி.ஜி.என் சமரசிங்க, மூதூர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, மூதூர் மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஜெஸ்மி மற்றும் மூதூர் பிரதேச செயலக அங்கத்தவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றன.

affiliate link trace | シューズ