Header

Sri Lanka Army

Defender of the Nation

27th June 2018 16:09:29 Hours

இராணுவ தளபதியுடன் கனேடியத் தூதுவர் பேச்சு

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவைச் சந்தித்து (26) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை பேச்சு நடத்தியுள்ளார்.

போருக்கு பிந்திய சூழலில் இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், நல்லிணக்க முயற்சிகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது கனேடியத் தூதுவருடன் இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும் கலந்து கொண்டார்.

அத்துடன் இலங்கை இராணுவ தளபதியுடன் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க, இலங்கை இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

jordan Sneakers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092