Header

Sri Lanka Army

Defender of the Nation

28th June 2018 15:58:37 Hours

யாழ் பாதுகாப்பு படையினரின் ஏற்பாட்டில் மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 1500 மூக்கு கண்ணாடிகள் பருத்திதுறை பிரதேச மக்களுக்கு (27) ஆம் திகதி குஞ்சள்கடி கொலின்ஸ் விளையாட்டு கழக வளாகத்தினுள் வழங்கப்பட்டன.

பொசன் தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது எண்ணக் கருவிற்கமைய 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயந்த குணரத்ன அவர்களது தலைமையில் இலங்கை கண் நன்கொடை சங்கத்தின் அனுசரனையுடன் பொது மக்களுக்கு இந்த மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி, 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே, பருத்திதுறை பிரதேச செயலாளர் அலவ்வை பிள்ளை ஶ்ரீ இலங்கை கண் நன்கொடை சங்கத்தின் தலைவர் விஸ்வகீர்த்தி பண்டார மொரஹஸ்வெவ, இலங்கை கண் நன்கொடை சங்கத்தின் அங்கத்தவர்களான டி.சி திரிஷான், டொக்டர் அஜந்த அபேவர்தன மற்றும் டொக்டர் ருவன் ஆசிரி அவர்கள் இணைந்திருந்தனர்.

Adidas footwear | New Balance 991 Footwear