Header

Sri Lanka Army

Defender of the Nation

28th June 2018 20:58:26 Hours

இராணுவத்தினரால் இலங்கை பூராக நடாத்திய பொசன் தின நிகழ்வுகள்

பொசன் பௌர்ணமி திளத்தை முன்னிட்டு இராணுவ தலைமையகம் மற்றும் பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் இடம்பெற்ற பொசன் தின நிகழ்வுகள் (27) ஆம் திகதி இடம்பெற்றன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களது தலைமையில் இராணுவ தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பொசன் தின நிகழ்வுகளில் பக்தி கீதங்கள், அன்னதானங்கள் மற்றும் பௌத்த சமய நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது தலைமையில் 52, 55 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டுடன் யாழ் குடா நாட்டின் சாவகச்சேரி பிரதேசங்களில் அன்னதான நிகழ்வுகளும் பருத்திதுறை பகுதிகளிலும் பொசன் வலயங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது எண்ணக் கருவிற்கமைய வவுனியாவில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் அனுசரனையுடன் அன்னதான நிகழ்வுகளும், மடுகந்த பிரதேசத்தில் பக்தி கீதங்கள் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலும் இடம்பெற்றன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது ஏற்பாட்டில் பொசன் வலயங்கள் மாங்குளம், கிளிநொச்சி பிரதேசங்களில் போதி பூஜைகள், சமய போதனைகள், பக்தி கீதங்கள் அலங்கார கூடு நிகழ்வுகள் இடம்பெற்றன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது ஏற்பாட்டில் முல்லைத்தீவு பிரதேசங்களில் அன்னதான நிகழ்வுகள் மற்றும் பொசன் கூட்டு கண்காட்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது ஏற்பாட்டில் இராணுவ பௌத்த சங்கத்தின் ஒத்துழைப்புடன் நோன்பு விரத பூஜைகள் பனாகொடையில் அமைந்துள்ள ஶ்ரீ போதிராஜாராம விகாரையில் ஒழுங்கு செய்யப்பட்டன. இவற்றில் 2500 பக்தர்கள் இணைந்திருந்தனர். அத்துடன் விகாரையில் பக்தி கீத நிகழ்வுகளும் , அன்னதானங்களும் வழங்கப்பட்டன.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது ஏற்பாட்டில் தியதலாவை கலாச்சார மையத்தில் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் மத்திய பாதுகாப்பு படையினரால் ஶ்ரீ விவேகராம விகாரை, உடுஅரவ, பண்டாரவெவ விகாரைகளில் பொசன் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களது ஏற்பாட்டில் பொலன்னறுவை நகர பிரதேசங்களில் பொசன் தோரணங்கள், பௌத்த நாடகங்கள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

மேலும் அநுராதபுரத்தில் சாலியபுர பிரதேசத்தில் அமைந்துள்ள கஜபா படையணி தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது ஏற்பாட்டில் படைத் தலைமையக வளாகத்தினுள் பக்தி கீத நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் கஜபா படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்ஷன் அவர்களும் இணைந்திருந்தார்.

jordan Sneakers | Nike Shoes