29th June 2018 13:16:31 Hours
பெப்பிலியான ஶ்ரீ சுனேத்ரா தேவி பிரிவின மற்றும் ரஜமஹா விகாரையில் 13 ஆவது வருடாந்த நினைவை முன்னிட்டு புன்னிய நிகழ்வுகள் மெடஹொட சுமனதிஸ்ஸ நாயக்க தேரர் அவர்கின் அனுசரனையுடன் 62 ஆவது படைப் பிரிவுகளுக்கு கீழ் இயங்கும் 622 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் இந்த நிகழ்வுகள் (22) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 140 கற்பணி பெண்களுக்கு 7 லட்சம் பெறுமதி வாய்ந்த உலர் உணவுப் பொருட்கள், உடைகள், குழந்தைகளுக்கான பொருட்கள், நுளம்பு வலைகள், சவக்காரம் , பால் மா பக்கட்டுகள், பணம், படுக்கை தாள்கள் போன்றவை விநியோகிக்கப்பட்டன.
மேலும் 6 இலட்சம் பெறுமதி மிக்க நிதி உதவிகள் வவுனியா அநுராபுரத்திலுள்ள விகாரைகளுக்கு இந்த நிகழவின் ஊடாக நன் கொடையாக வழங்கப்பட்டன.
அத்துடன் வரட்சி மற்றும் வேளாண்மையினால் பாதிப்புட்டிருக்கும் மக்களுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் 8 இலட்சம் நிதியுதவியில் 5 கிணறுகள் புணரமைப்பதற்கு நிதிகள் வழங்கப்பட்டன.
இப்பகுதியில் 110 க்கும் மேற்பட்ட பௌத்த துறவிகளுக்கு சங்கீகா தான நிகழ்வுகள் ஹெலம்பவெவ கிராம வாசிகளினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 62 மற்றும் 622 ஆவது படைத் தலைமையகத்தின் முழுமையான ஏற்பாட்டுடன் பொலிஸாரது ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
Sportswear Design | Nike for Men