Header

Sri Lanka Army

Defender of the Nation

29th June 2018 18:29:17 Hours

மெகா திட்டத்தின் கீழ் ஆஸ்மோஸ் தாவரங்களை பயண்படுத்தி குடிநீர் வழங்கும் திட்டம்

யாழ்ப்பாண குடா நாட்டில் மெகா திட்டத்தின் கீழ் ஆஸ்மோஸ் தாவரங்களை பயண்படுத்தி குடி நீர் வழங்கும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் குடா நாட்டிலுள்ள 7 இராணுவ முகாம்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் (26) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டுள்ளன.

இராணுவ தளபதியின் வேண்டுகோளுக்கு அமைய இலங்கை கடற்படையால் இந்த சிகிச்சை நிலையங்கள் தயாரிக்கப்பட்டு இராணுவ முகாம்களுக்கு வழங்கப்பட்டன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் இந்த திட்டங்கள் அனைத்து பிரதேசங்களிலும் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் 51, 52 ஆவது படைப் பிரிவுகள் 6 ஆவது இலங்கை சமிக்ஞை படையணி, 4 ஆவது விஜயபாகு காலாட் படையணி, 2 ஆவது இராணுவ புலனாய்வு படையணி, 10 (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 15 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணிகள் நன்மையை பெற்றுள்ளன.

இந்த நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர்.

Sportswear Design | Sneakers