Header

Sri Lanka Army

Defender of the Nation

26th June 2018 15:23:49 Hours

யாழ் படையினருக்கு கணினி பாடநெறி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் ஒரியன்ட் லங்க அகடமியின் ஒத்துழைப்புடன் யாழ்பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் படையினர்களுக்காக மேலும் ஒரு கணினி பாடநெறி ஜூன் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை 3 ஆவது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி தலைமையகத்தில்கணினி பாடநெறி இடம் பெற்றதுடன், இப் பாடநெறியின் முடிவில் படையினருக்கு சான்றிதல்களும் வழங்கப்பட்டனர்.

அதன்படி 25 படையினர்களின் பங்களிப்புடன் இடம் பொற்ற இப் பாடநெறியில் திறமையான வீரராக முதலாவது இடத்தை 25 ஆவது விஜயபாகு படையணியின் சாதாரன வீரர் எஸ்.எம் சதீஸ்வரன் பெற்றுக் கொண்டார். அதேபோல் 16 ஆவது பொறியியல் சேவைப் படையணியின் சாதாரன வீரர் எச்.டி.ஆர் குமார மற்றும் 5 ஆவது இலங்கை இராணுவ யுத்த உபகரண படையணியின் சாதாரன வீரர் ஏ.எம்.பி அமரசிங்க இரண்டாவது மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுக் கொண்டனர்.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்ற இந்த பாடநெறியின் நிறைவு நிகழ்வில் யாழ் பாதுகாப் படைத் தலைமையகத்தின் பிரதான பதவி நிலை அதிகாரி 1 (செயல்பாடு மற்றும் பயிற்சி) லெப்டினென்ட் கேர்ணல் நிஷாந்த முதுமால அவர்களால் பாடநெறியின் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டனர்.Running Sneakers | Air Jordan Release Dates 2021 Updated , Gov