25th June 2018 12:47:10 Hours
கலாஓயா சாலியவெவவில் அமைந்துள்ள இராணுவ தொழில் பயிற்சி மையத்தினால் 83 இராணுவத்திலிருந்து ஓய்வூதியம் பெறவிருக்கும் படையினர்கள் மற்றும் சிவில் மாணவர்களுக்கு தேசிய தொழில் தகுதி பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பயிற்சிகளின் நிறைவு விழா (22) ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றன.
இந்த பயிற்சி நெறிகள் ஆறு மாத காலமாக இடம்பெற்றது . இந்த பயிற்சியில் இராணுவத்தைச் சேர்ந்த 83 பேரும் சிவில் மாணவர்கள் 17 பேரும் பயிற்சிகளை மேற்கொண்டு சாதகமாக பயிற்சிகளை நிறைவு செய்தனர்.
இந்த பயிற்சி நிறைவு விழாவிற்கு பிரதம அதிதியாக இராணுவ தொழில் பயிற்சி மையத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் கே.ஏ.டப்ள்யூ குமாரப்பெரும வருகை தந்து பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் இராணுவ தொழில் பயிற்சி மையத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சசிக பெரேரா, அநுராதபுர SLVTA கிளையின் பிரதி பணிப்பாளர் எச்.பி.டப்ள்யூ ரொஹான் பிரியந்த அவர்கள் இணைந்திருந்தனர்.Running sport media | jordan Release Dates