Header

Sri Lanka Army

Defender of the Nation

25th June 2018 13:17:33 Hours

இராணுவம் மற்றும் ‘மனுசத் தெரன’ அமைப்பின் ஏற்பாட்டில் வெலிஓயவில் மருத்துவ கிளினிக்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 62, 621 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ‘ மனுசத் தெரன’ அமைப்பின் அனசரனையுடன் மருத்துவ கிளினிக் முகாம் வெலிஓயாவில் அமைந்துள்ள எகெதுகஸ்வெவ மஹா வித்தியால வளாகத்தினுள் (23) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றன.

இந்த சிகிச்சை முகாமில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டன. வெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 1832 பேர்கள் இந்த சிகிச்சைகளுக்காக சமூகமளித்தனர்.

மருத்துவ முகாமில் கண் பார்வை மையம், சி.கே.டி. முன்பதிவு மருத்துவமனை, கார்சினோமா சிண்ட்ரோம் ஸ்கிரீனிங் கிளினிக் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் கிளினிக் மற்றும் கண் மருத்துவமனை ஆகியவைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன. அத்துடன் பிரதேசத்தில் பொது மக்களுக்கு இலவச மருந்து மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

வெலிஓயா பிரதேசத்தில் பார்வை குறைபாடுள்ள கிராமவாசிகள் மத்தியில் 550 கிளைகள் விநியோகிக்கப்பட்டன. வெலிஓயா பகுதியில் மின்சாரம் பெறும் வகையில் 15 மேலும் சோலார் பேனல்கள் நன்கொடையாகவும் வழங்கப்பட்டன. அத்துடன் எஹெதுகஸ்வெவ மகா வித்தியாலய மாணவர்களுக்கும் இந்த ‘மனுசத் தெரன’ அமைப்பினால் நீர் சுத்திகரிப்பு இயந்நிரம் மாணவர்களின் நன்மைக்காக அதே விழாவில் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இதற்கிடையில், வெலிஓயா பிரதேசவாசிகளுக்கு இலங்கை கண் நன்கொடைச் சமுதாயத்தில் பதிவு செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கினார்கள்.

சம்பத்நுவர பிரதேசத்தில் 62, 621 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 2 டொக்டர்கள் மற்றும் உதவி வைத்திய பணியாளர்களின் பங்களிப்புடன் 14 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் பயைணி மற்றும் 17 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் ஒத்துழைப்புடன் வெலிஓயாவில் இந்த மருத்துவ கிளினிக் இடம்பெற்றன.

இந்த சிகிச்சை முகாமின் அனைத்து ஏற்பாடுகளும் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சஞ்ஜய வனிகசிங்க, 621 ஆவது படைத் தலைமையகத்தின் தளபதி கேர்ணல் கல்ப சஞ்ஜீவ மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளது தலைமையில் இடம்பெற்றன.

url clone | FASHION NEWS