Header

Sri Lanka Army

Defender of the Nation

24th June 2018 14:39:51 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் பதுளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்

பதுளை மாவட்டத்தில்டெங்கு தடுப்புத் திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் உள்ள நகராட்சி மன்றம், சிறைச்சாலை, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் புகையிரத நிலையம் ஆகியவற்றின் அரச ஊழியர்களின் பங்களிப்புடன் சிரமதான பணிகள் (21) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றன.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணிகளுக்கு 112 ஆவது படைத் தலைமையகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி உட்பட 20 படை வீரர்கள் இணைந்திருந்தனர். இந்த சுத்திகரிப்பு பணிகள் பதுள்ளையில் அமைந்துள்ள பஸ் நிலையம், பொதுச் சந்தை புதிய சந்தை கட்டிட தொகுதிகளில் இடம்பெற்றன.நகரின் தூய்மைக்குஇந்த பணிகளின் போது முன்னுரிமை வழங்கப்பட்டது.

இந்த பணிகளின் போது பொதுமக்களின் நட்பான திட்டங்களை ஒழுங்கு செய்வதற்காகவும் இராணுவ தளபதி மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு பொதுமக்களின் பாராட்டுக்களை கிடைக்கப் பெற்றன..

மேலும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இருக்கும் 12, 122 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் (22) ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மற்றுமொரு டெங்கு ஒழிப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டன.

.

சீரற்ற காலநிலை நிமித்தம்டெங்கு காய்ச்சலை பரப்பும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. எனவே, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மற்றும் சுற்றியுள்ள நுளம்புகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 23 ஆவதுகஜபா படையணி மற்றும் 3 ஆவது இலங்கை தேசிய படையணியைச் சேர்ந்த 20 படையினர்களின் பங்களிப்புடன் ஹம்பாந்தோட்டையில் உள்ள கிரிந்த பாலர் பாடசாலை மற்றும் வெலிவேவ வித்தியாலய பாடசாலை வளாகங்களில் இந்த டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

latest Nike release | jordan Release Dates