Header

Sri Lanka Army

Defender of the Nation

24th June 2018 00:16:24 Hours

கிளிநொச்சியில் ஹார்மனி சொக்கர் விளையாட்டு போட்டி

கிளிநொச்சி மாவட்டத்தின்; பொதுமக்கள் மற்றும் படையினர்களின் மத்தியில் புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக கிளிநொச்சி ஹார்மனி சொக்கர் விளையாட்டு போட்டியானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப்பிரின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களின் ஆலோசனைக்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிவபுரம் விளையாட்டு மைதானத்தில் கடந்த (21) ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.

மேலும் இப் போட்டியானது 57 ஆவது படைப் பரிவின் கட்டளை தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் 573 ஆவது படைப்பரிவின் படையினர்களின் ஒத்துழைப்புடன் சிவபுரம் மத்திய' கால்பந்தாட்ட அணி மற்றும் 1 ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணிக்கும் இடையே நடைப் பெற்றது.

இப் போட்டியை பார்வையிட பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரரும் கலந்து கொண்டனர்.

எனினும் 'சிவபுரம் மத்திய' விளையாட்டுக் குழுவில் வீரர்கள் 1 ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணியுடன் போட்டியிட்டு 2 - 1 என்ற விகிதத்தில் வெற்றிபெற்றனர்.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக 57 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதியவர்கள் கலந்து கொண்டார்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவனா அவர்கள் இந் திடடத்திற்கு தனது ஆசர்வாதங்களையும் வழங்கினார்.

இந் நிகழ்விற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் 571>572 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

jordan Sneakers | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos