Header

Sri Lanka Army

Defender of the Nation

24th June 2018 00:21:04 Hours

மலையாளபுரம் சிவிலியன்களுக்கு படையினரால் வைத்திய பரிசோதனை

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப்பிரிவிற்குட்பட்ட 571 ஆவது படைப்பிரிவின் 9 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் கிளிநொச்சி மலையாளபுரம் கிராம வாசிகளின் நலன் கருதி ஆரோக்கிய நலம் எனும் தலைப்பில் கடந்த (21) ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மலையாளபுரம் கிராம வளாகத்தில் வைத்திய பரிசோதனைகள் நடத்தினர்.

இவ் வைத்திய பரிசோதனையானது கிளிநொச்சி வைத்தியசாலையின் மருத்துவ உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஒத்துழைப்புடன் 57 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய ஆவர்களின் முன் முயற்ச்சியால் ஏற்பாடுசெய்யப்பட்டது.

இந்த மருத்துவ பரிசோதனையில் 100 க்கும் அதிகமாக நோயாளர்கள் கலந்த கொண்டனர்.

Best Sneakers | Nike Air Max 270