Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd June 2018 15:18:48 Hours

56 ஆவது படைப் பிரிவினால் ஏற்பாடு செய்த குடும்ப சுற்றுலா பயணம்

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது தலைமையில் 56 ஆவது படைப் பிரிவின் சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கு நான்கு நாள் சுற்றுலா பயணம் ஜூன் 14 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை ஒழுங்கு செய்யப்பட்டன.

இந்த சுற்றுலா பயணத்தின் முதலாவது தினமாக அநுராதபுரத்தில் அமைந்துள்ள ருவன்வெலி மஹாசேய லொவமஹாபாய பழமை வாய்ந்த புராதன விகாரைக்கு சென்றனர்.

இரண்டாவது தினமாக மன்னாரில் அமைந்துள்ள மடு மாதா தேவாலயத்திற்கும், மூன்றாவது நாள் தலைமன்னாரில் அமைந்துள்ள திருக்கேதிஸ்வரம் ஆலயத்திற்கும் சென்றார்கள்.

இறுதி தினமான நான்காவது நாள் இரவு விருந்துபசாரம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சியும் 56 ஆவது படைத் தலைமையகத்தில் இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 56 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் பிரபாத் தெமடம்பிடிய அவர்கள் வருகை தந்தார்.

Buy Kicks | Asics Onitsuka Tiger