Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd June 2018 14:59:12 Hours

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் சிரமதான பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65, 652 மற்றும் 653 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஜூன் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை கிளிநொச்சி பிரதேசத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 652 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 1 ஆவது கஜபா படையணியினால் கொடிகடியாறுகுளம் பாடசாலை வளாகத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன் 653 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 10 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் துனுக்காய் பள்ளிநகர் விளையாட்டு மைதானத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது பணிப்புரைக்கமைய 65 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

Buy Kicks | Ανδρικά Nike