Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd June 2018 14:37:15 Hours

பாதுகாப்பு சேவைகள் பெட்மின்டன் போட்டிகள்

இலங்கை இராணுவத்தின் ஆண் மற்றும் பெண் பெட்மின்டன் வீரர் வீராங்கனைகள் கொழும்பில் 7 இல் அமைந்துள்ள இலங்கை விமானப்படையின் பெட்மின்டன் உள்ளரங்க மைதானத்தில் இடம்பெற்ற 10 வது பாதுகாப்பு சேவைகள் பெட்மின்டன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டனர்.

இப் போட்டிகள் (21) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றன. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி வயிஷ் அட்மிரால் சிரிமவன் ரணசிங்க அவர்கள் வருகை தந்தார். அவர்களை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ அவர்கள் வரவேற்றார்.

மேலும் இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர சுதசிங்க, இராணுவ பெட்மின்டன் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் டி.டீ கமகே மற்றும் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

Running sport media | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE