Header

Sri Lanka Army

Defender of the Nation

18th June 2018 13:44:55 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் துப்பாக்கி சூட்டு பயிற்ச்சிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் என்னக்கருவிற்கமைய இந்த துப்பாக்கி சூட்டு போட்டிகள் கடந்த மே மாதம் 10 ம் திகதி தொடக்கம் 14 அம் திகதி வரை யாழ் மயிலிட்டி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

இந்த போட்டியில் மொத்தம் 210 அதிகாரிகள் துப்பாக்கி பயிற்ச்சியில் போட்டியிட்டனர் அதன் படி இப் போட்டி யாழ் படைத் தலைமையகத்தில் நடத்தப்பட்ட முதல் துப்பாக்கி சூடு போட்டியாகும் இப் போட்டியில் 200 க்கும் அதிகமான இராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த துப்பாக்கி போட்டியில் 15 ஆவது கஜபா படையணியின் லெப்டினென்ட் யொகான் ரத்னாயக முதல் இடத்தையும், இயந்திர காலாட் படையணியின் லெப்டினென்ட கேர்ணல் நலின் பிரபாத் இரண்டாவது இடத்தையும், 23 ஆவது கெமுனு ஹேவா படையணியின் கெப்டன் கவிந்த பண்டார முன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டார்.

இந் நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மற்றும் வடக்கு கடற் படையதிகாரியான அட்மிரல் மெரில் விக்ரமசிங்க மற்றும் 51-52 ஆவது படைப் பரிவின் கட்டளை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பரிசு வழங்கும் நிகழ்வு கடந்த (14) ஆம் திகதி வியாழக் கிழை இடம் பெற்றது.

Sport media | nike air barkley posite 76ers shoes for women Maximum Volume DJ4633-010 Release Date - SBD