17th June 2018 20:03:13 Hours
‘தஹம் பஹன’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இப் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தை பெறும் நபர்களுக்கு சைக்கிள்கள், தென்னங் கன்றுகள் மற்றும் செயற்கை கால்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வு யாழ்ப்பாண இலங்கை வேந்தன கலைக் கல்லூரியில் (13) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன. அதன்போது 100 துவிச்சக்கர வண்டிகளும், 2000 தென்னங் கன்றுகள் மற்றும் அங்கவீனமுற்ற நபர்கள் நான்கு பேருக்கு செயற்கை கால்களும் விநியோகிக்கப்பட்டன. அத்துடன் காங்கேசன்துறையில’ இரு குடும்பத்தினருக்கு வீடுகள் நிர்மானித்து வழங்கப்படும் என்பதும் இந்த நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலும், பொதுமக்களிடமும் சேவையாற்றிய 'தஹம் பஹான' நிறுவனர், சகோதரர் சார்லஸ் தாமஸ், சமய மற்றும் சமுதாயத் தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Nike footwear | Mens Flynit Trainers