12th June 2018 20:05:00 Hours
இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பூரண ஏற்பாட்டுடன் ஒழுங்கு செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சி வாத்துவையில் உள்ள லாயா பீச் ஹோட்டலில் (11) ஆம் திகதி மாலை இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சி இராணுவ முஸ்லீம் சங்கத்தின் தலைவர் மற்றும் மின்னேரிய காலாட் பயிற்சி முகாமின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜய அவர்களின் தலைமையில் 250 இராணுவத்தினரது பங்களிப்புடன் இடம்பெற்றன.
இப்தார் நிகழ்ச்சியில் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த பிரதான மௌவியினால் ரம்லான் மாதத்தில் இடம்பெறும் இப்தார் நிகழ்ச்சி தொடர்பான விளக்கங்களை சொற்பொழிவு மூலம் ஆற்றினார். அத்துடன் மௌவியினால் சிங்கள மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட அல் - குரான் பிரதிகள் இராணுவ தளபதி, இராணுவ பதவி நிலை மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ மற்றும் இராணுவ மூத்த அதிகாரிகளுக்கு இந்த நிகழ்ச்சியின் ஊடாக கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு இராணுவத்தில் சேவை புரியும் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் மற்றும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் இணைந்திருந்தனர்.
Nike sneakers | GOLF NIKE SHOES