Header

Sri Lanka Army

Defender of the Nation

10th June 2018 21:00:54 Hours

இலேசாயுத காலாட் படையணியினால் முதியோர் மடத்திலிருக்கும் இராணுவத்தினரை கௌரவிப்பு

இலங்கை இலேசாயுத காலாட் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்களது தலைமையில் இலேசாயுத காலாட் படையணியின் சிரேஷ்ட இராணுவ குழுவினர் கந்தானை பொலகல்லையில் அமைந்துள்ள முப்படையினருக்கான முதியோர் விடுதியில் உள்ள இராணுவத்தினரை சென்று (8) ஆம் திகதி வெள்ளிக் கிழமை பார்வையிட்டனர்.

இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, பிரகேடியர் அம்பேமோட்டி, பிரிகேடியர் கே.ஜே ஜயவீர, பிரகேடியர் எம். எம் கித்சிரி மற்றும் கேர்ணல் டீ.ஏ.கே திசாநாயக போன்ற அதிகாரிகள் இந்த முதியோர் மடத்திற்கு சென்றிருந்தனர்.

அங்கு சென்ற அதிகாரிகள் மஹா சங்க மஹா சங்க மனிங்கமுவ தம்மாஜோதி தேரர் அவர்களின் தலைமையில் இந்த முதியோர் இல்லத்தில் உள்ள 22 இராணுவ வீரர்களுக்கு பௌத்த சமய ஆசிர்வாத பூஜைகளை ஒழுங்கு செய்தனர்.

அதனை தொடர்ந்து இவர்களை சந்தோச படுத்தும் முகமாக இலேசாயுத காலாட் படையணியினால் கெலிப்சோ இன்னிசை நிகழ்ச்சிகள் இடம்பெற்று இங்குள்ள முதியோர்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

buy footwear | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov