Header

Sri Lanka Army

Defender of the Nation

07th June 2018 22:05:16 Hours

இராணுவத்தினர் அனர்த்தத்தில் பாதிப்புற்ற பிரதேசங்களை சுத்தம் செய்யும் பணிகளில்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இயற்கை அனர்த்த த்தினால் பாதிப்புற்ற பிரதேசங்களான கம்பஹா,கொழும்பு மற்றும் புத்தளம் பிரதேசங்களில் உள்ள குடிநீர் கிணறுகளை இராணுவத்தினரது தண்ணீர் இயந்திர பம்முகளை கொண்டு சுத்திகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த பணிகள் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களது பணிப்புரைக்கமைய 14 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள படையணிகளால் மேற்கொள்ளப்பட்டன.

கம்பஹா மாவட்த்திலுள்ள மஹலேகொட, அத்தனகல்ல பிரதேசங்களில் 141 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 8 ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் 26 குடிநீர் கிணறுகள் (6) ஆம் திகதி புதன் கிழமை சுத்தம் செய்து கொடுக்கப்பட்டன.

மேலும் 14 ஆவது படைப் பிரிவினால் வெவல்தெனிய, ஹந்தேனிய, பெட்டியகொட, தரல்லுவ, பட்டியாபொல, மஹலேகொட, ஆரச்சிகட்டுவ மற்றும் பமுனுகொடுவ பிரதேசங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

jordan release date | Nike