Header

Sri Lanka Army

Defender of the Nation

06th June 2018 13:04:13 Hours

வன்னி இராணுவத்தினரால் பாலர் பாடசாலை நிரமானிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் ஹேமாஷ் அவுட்ரெச் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. சக்த அமரதுங்க மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் திருமதி சிரோமி மஷாகோரல்ல அவர்களது அனுசரனையுடன் இந்த பாலர் பாடசாலை மன்னார் மாவட்டத்திலுள்ள கல்லியடி பிரதேசத்தில் (31) ஆம் திகதி வியாழக் கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்டிட பணிகளுக்கு 2.5 மில்லியன் ரூபாய் ‘ஹேமாஷ் அவுட்ரெச் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான ஒத்துழைப்பை 54 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அதுல கலகமகே அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவ நிர்மான பணியினர் 26 நாட்களுக்குள் இந்த கட்டிட நிர்மான பணிகளை முடித்துள்ளனர்.

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் 'பிரதான கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டமான' பியவர ' பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சுடன் இணைந்து இலங்கையில் சிறுவர்களுக்கான நட்பான முன்-பள்ளிகளை நிறுவுவதன் மூலம் இலங்கையில்' ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி 'குறித்து கவனம் செலுத்துகிறது. 3500 க்கும் அதிகமான பிள்ளைகள் தமது ஆரம்ப கல்வியைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கையில் இத்தகைய பல முன்பள்ளிகள் ஆரம்பித்துள்ளன.

இந்த கட்டிட நிர்மான பணிகள் 541 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் கே.ஆர்.கே.கே.டி பண்டார அவர்களின் பூரண தலைமையில் இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, 54 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அதுல கலகமகே, ஹேமாஷ் அவுட்ரெச் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. சக்த அமரதுங்க மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் திருமதி சிரோமி மஷாகோரல்ல அவர்கள் கலந்து கொண்டனர்.

jordan Sneakers | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff