Header

Sri Lanka Army

Defender of the Nation

04th June 2018 15:20:15 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் நடாத்தப்பட்ட மரண சடங்கு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவில் கடமை புரியும் 6 ஆவது (தொண்டர்) இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த இரு இராணுவ வீராங்கனைகளது தகப்பனான கே. கோவிந்தராசா (வயது 48) அவர்களது மரணச் சடங்குகளுக்கான உதவிகள் இராணுவத்தினரால் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தின் 6 ஆவது மகளீர் படையணியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வீராங்கனைகளான கே. கௌசல்யா மற்றும் கே. நிஷாந்தனி அவர்களது தந்தையார் டெங்கு நோயினால் பாதிப்புக்கு உள்ளாகியிருந்து பின்பு வெள்ளிக் கிழமை முதலாம் திகதி காலமானார். இவர் உயிலின்பும் தம்பிராசபுரம், தர்மபுரம் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

இந்த இரு இராணுவ வீராங்கனைகளும் இராணுவ “சத்ரங்க நடன கலை” பிரிவில் கடமை புரிகின்றனர்.

இந்த மரணச் சடங்கிற்கான அனைத்து ஒத்துழைப்பும் 6 ஆவது சிங்கப் படையணி, 6 (தொ) இராணுவ மகளீர் படையணி, 14 (தொ) இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி, 57 படைப் பிரிவு, 572, 573 ஆவது படைத் தலைமையகத்தின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்றன.

இந்த மரணச் சடங்குகளின் இறுதி கிரியைகள் இந்து சம்பிரதாய முறைப்படி இராணுவத்தினரது பங்களிப்புடன் இடம்பெற்றன.

bridge media | THE SNEAKER BULLETIN