Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd May 2018 20:15:48 Hours

வெலிக்கந்தையில் பளு தூக்கும் போட்டி

தேசிய இளைஞர் இளையோர் மற்றும் பெரியவர்களுக்கான பளு தூக்கும் போட்டியானது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் மே மாதம் 19 ஆம் திகதி மற்றும் 20 ஆம் திகதிகளில் இடம் பெற்றது.

இந்த போட்டி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் வெலிக்கந்தை பிரதேச செயலகத்தினரின் ஆதரவுடன் பொலன்னறுவை மாவட்ட பளு தூக்கும் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இப் போட்டியானது இளைஞர் யுவதிகளின் பளு தூக்குதல் போட்டியில் தேசிய சர்வதேச மட்டத்தில் விளையாட்டு வீரர்களைத் தேர்வுசெய்வதன் நோக்கம் நடைப் பெற்றது.

வெலிக்கந்தை பிரதேச செயலாளர் ஹர்ஷ பண்டார அவர்களின் அழைப்பை ஏற்று இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வல கலந்து கொண்டார்.

இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதல்கள் வழங்குவதற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் விஷேச அதிதிகள் கலந்து கொண்டனர்.

Nike footwear | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp