Header

Sri Lanka Army

Defender of the Nation

19th May 2018 12:45:25 Hours

தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வினையிட்டு 28,619 விளக்குகளுடன் ஆலோக பூஜை நிகழ்வுகள் களனி விகாரையில்

இராணுவத்தின் ஏற்பாட்டில் முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள படையினரது பங்களிப்புடன் எல்டிடிஈ பயங்கரவாதிகளுடன் நாட்டிற்காக போராடி மரணித்த படை வீரர்களை கௌரவிக்கும் முகமாக இந்த ஆலோக விளக்கு பூஜைகள் களனி ரஜ மஹ விகாரையில் (19) ஆம் திகதி இடம்பெறும்.

இந்த ஆலோக விளக்கு பூஜைகள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது ஏற்பாடுடன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை கௌரவிக்கும் முகமாக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்விற்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் அவர்களும் கலந்து கொள்வார்கள். அத்துடன் அங்கு இடம்பெறும் ‘கிலன்பச’ பௌத்த மத பூஜைகளிலும் கலந்து கொள்வர்.

தேசிய படைவீரர் நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவத்திலுள்ள அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்கள், படைப் பிரிவுகள், முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகம், பிரிக்கட்டுகள், படையணிகள், இராணுவ பயிற்சி நிலையங்களில், படையணி தலைமையகங்களில் (18) ஆம் திகதி தேசிய கொடியேற்றி தேசிய கீதம் மற்றும் இராணுவ கீதம் இசைத்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை கௌரவிக்கும் முகமாக இராணுவ தளபதியின் செய்தி அறிக்கையும் வாசிக்கப்படும்.

மே மாதத்தில் ரணவிரு சேவா அதிகார சபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு மே மாதம் 19 ஆம் திகதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள நினைவு தூபியில் நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் முப்படை தளபதிகளின் பங்களிப்புடன் குருநாகலில் ‘வயம்ப ரணவிரு அபிமான்’ படை வீர்ர் ஞாபகார்த்த நினைவு தூபி (11) ஆம் திகதி வெள்ளிக் கிழமை குருநாகலில் மேன்மை தங்கிய ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவு தூபி 2009 ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து இந்த நாட்டை மீட்டு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீர்ர்களை நினைவு படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியான அத்மிரால் ரவீந்திர சி விஜயகுணரத்ன, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, கடற்படைத் தளபதி வயிஷ் அத்மிரால் சிரிமவன் ரணசிங்க , முப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் இந்த நிகழ்வில் இணைந்திருந்தனர்.

இந்த தேசிய படைவீர்ர் ஞாபகார்த்த நிகழ்வு கடந்த தினத்தில் யாழ்ப்பாண பலாலியில் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபியில் வடமாகாண ஆளுனரின் தலைமையில் ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி அனோமா பொன்சேகா அவர்களது பங்களிப்புடன் அனைத்து சமய ஆசிர்வாதத்துடன் முப்படை மற்றும் பொலிஸாரது பங்களிப்புடன் இடம்பெற்றன.

இந்த நினைவு தின நிகழ்வு யாழ்ப்பாணம், அநுராதபுரம், மைலப்பிட்டி, குருநாகல் நினைவு தூபிகளில் மே மாதம் 11 ஆம் திகதியும், இரத்தினபுரியில் 14 ஆம் திகதியும், பதுளை மற்றும் காலி பிரதேசத்தில் உள்ள நினைவு தூபிகளில் 15 ஆம் திகதியும் இடம்பெற்றன.

இந்த நினைவு தின நிகழ்வுகள் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆளுனர்களின் ஒத்துழைப்புடன் ரணவிரு சேவா அதிகாரசபையின் ஏற்பாட்டில் முப்படை மற்றும் பொலிஸாரது பங்களிப்புடன் இடம்பெற்றன.

இந்த மே மாதம் 19 ம் திகதி பத்தரமுல்ல பாராளுமன்ற மைதான வளாகத்தினுள் அமைந்துள்ள நினைவு தூபியில் இடம்பெறவிருக்கும் தேசிய படைவீர்ர் ஞாபகார்த்த நிகழ்விற்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி, பிரதம மந்திரி, பேச்சாளர்கள், ஆளுனர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பதவிநிலை பிரதானி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி , சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் தியாகம் செய்த படை வீரர்களது உறவினரின் பங்களிப்புடன் இடம்பெறும்.

எமது நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட எல்டிடிஈ பயங்கரவாத தாக்குதலின்போது எமது நாட்டிற்காக உயிர் தியாகம் முப்படை மற்றும் பொலிஸாரை நினைவு படுத்தும்’ முகமாக இந்த அஞ்சலி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் முப்படையினரது ரணபெர, ஹெவிசி, மகுல்பெர, ஹெடபெர,மேள தாள இசை நிகழ்வும் இடம்பெறும்.

இந்த நிகழ்வின் போது மேன்மை தங்கிய ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பாதுகாப்பு செயலாளர் , பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர் மலர்மாலை அஞ்சலிகளை செலுத்துவார்கள்.

ஜனாதிபின் தலைமையில் மரணித்த படை விரர்களை கௌரவித்து முப்படையினரால் லாஸ்ட் போஸ்ட் ஓசை இசைக்கப்படும். அத்துடன் இந்த படை வீரர்களை நினைவு படுத்தி ஆலோக பூஜை விளக்கு எரிக்கப்படும் நிகழ்வு இடம்பெறும்.

இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்களது ஏற்பாட்டில் பனாகொடையில் அமைந்துள்ள போதிராஜா விகாரையில் பௌத்த பிரித் நிகழ்வுகள் இம் மாதம் (12) ஆம் திகதி இராணுவ அங்கத்தவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றன.

இந்த நிகழ்வானது மரணித்த படை வீரர்களை கௌரவித்து அவர்களது ஆத்மாக்கள் சாந்தியடைய பிரார்த்தனையுடன் அவர்களை நினைவு படுத்தும் நிகழ்வாக அமைகின்றது.

latest Running | UOMO, SCARPE