19th May 2018 21:58:16 Hours
"எங்கள் மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இம் மாதம் மே மாதம் 19 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் தேசிய படைவீர்ர் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படையினரை கெளரவித்து இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் அஞ்சலி செய்தியை வெளியிடுகின்றார்.
இராணுவ தளபதியின் நினைவுச்சின்ன செய்தி முழு உரை பின்வருமாறு;
தாய்நாட்டை காத்த பாதுகாப்பு படையினர்களை மதிப்போம்
1983 ஆம் ஆண்டில் சிறு குழுவாக ஆரம்பிக்கப்பட்ட எல்.டி.டி.ஈ பயங்கரவாத அமைப்பானது, 2009 ஆம் ஆண்டின்போது உலகில் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றாக வளர்ந்து காலாட்படை, தீயணைப்பு, கடற்படை, விமானப்படை மற்றும் தற்கொலை படையணிகளை கொண்டு இந்த அமைப்பானது உலக ரீதியாக புகழைப் பெற்றது.
இந்த எல்டிடிஈ அமைப்பானது ஆயிரக் கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கேடயங்களாக பயண்படுத்தி ஈழ அரசை உருவாக்குவதற்கு சர்வதேச புலம்பெயர்ந்தோரின் ஆதரவுடன் பயங்கரவாத அமைப்பை நடத்தி சென்றனர். துரதிஷ்ட வசமாக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரது தைரியமான துணிச்சலான அர்ப்பணிப்பு நடவடிக்கையின்போது 19 மே 2009 ஆம் ஆண்டு அன்று பயங்கரவாதம் இலங்கையில் முற்றிலும் அழிக்கப்பட்டன. இந்த மனிதாபிமான நடவடிக்கையின் போது இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்க படை வீரர்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இலங்கையில் 30 வருட காலமாக இடம்பெற்ற பயங்கரவாத கொடிய யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தில் (23,962) பேரும், கடற்படையில் (1160) பேரும், விமானப் படையில் (443) பேரும் , 2598 பொலிஸாரும் 456 சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்களும் தாய்நாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். இவர்களது ஆத்மா சாந்தியடைவதற்கு இவர்களை கௌரவித்து இந்த நினைவு தின நிகழ்வு இடம்பெறுகின்றன.
முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீர்ர்கள் ஒன்றினைந்து எமது மண்ணிலிருந்து எல்டிடிஈ பயங்கரவாத அமைப்பை அழித்து. எமது நாட்டில் முழுமையான சமாதானத்தை எமக்கு வழங்கியுள்ளனர். இப்படிப்பட்ட படை வீரர்களை தனிப்பட்ட ரீதியாகவும் சமூக விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட தூண்டப்படக்கூடாது.
இந்த நினைவு தினத்தை முன்னிட்டு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் முப்படை தளபதிகளின் பங்களிப்புடன் ‘ஆலோக பூஜை’ விளக்கு நிகழ்வுகள் களனி ரஜமஹ விகாரையில் இராணுவத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக இடம்பெற்ற இந்த யுத்தத்தினால் அச்சமற்ற போர் வீரர்கள் தங்களது மதிப்புமிக்க உயிர்களை கூட பொருட்படுத்தாமால் இந்த நாட்டிற்காக தமது வியர்வை, இரத்தம் மற்றும் உயிர்களை அர்ப்பணித்துள்ளனர். இவர்கள் ஆற்றிய இந்த சேவையை ஒரு போதும் நாம் மறக்கமுடியாது.
இந்த யுத்தத்தின் போது நாட்டிற்காக உயிர் தியாகம்செய்த படை வீரர்கள் மற்றும் அவயங்களை இழந்த படை வீரர்களுக்கும் எனது மனப்பூர்வமான இதய அஞ்சலியை செலுத்துகின்றேன். அத்துடன் இந்த படை வீர்ர்களது பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு இத்தருணத்தில் மனப்பூரத்வமான நன்றியை தெரிவிக்கின்றேன்.
spy offers | Marki