Header

Sri Lanka Army

Defender of the Nation

10th May 2018 17:29:27 Hours

அம்பாறை பிரதேச சிவில் மக்களுக்கு மருத்துவம் மற்றும் புத்தகசாலைக்கு புத்தக நன்கொடை

கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையகத்துக்கு கீழ் இயங்கும் அம்பாறை மல்வத்த பிரதேசத்தில் அமைந்திருக்கும் 24 ஆவது படைப்பரிவின் படையினர்களின் ஒத்துழைப்புடன் அம்பாறை ரொட்டரி சங்கம் மற்றும் கொழும்பு நடமாடும் சேவைகளினால் இலவச மருத்துவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த வைத்திய பரிசோதனை 241 ஆவது படைப்பரிவின் படையினரால் 2018 மே மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரை உகண வைத்திய சாலையில் நடைப் பெற்றது.

இந்த புண்ணிய திட்டத்திற்காக நடமாடும் சேவைகள் மருத்துவம் மற்றும் ரொட்டரி சங்கத்தின் 15 வைத்தியர்களும் 16 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரும் கலந்து கொண்டார்கள்.

இம் மருத்துவ பரிசோதனைக்கு 675 க்கும் அதிகமான பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் மருத்துவ பரிசோதனையில் 250 மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளர்கள் 671 பேர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதுடன் அதே போல் 40 நோயாளர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டனர்.

ரொட்டரி சங்கத்தின் தலைவரின் அழைப்பை ஏற்று 24 ஆவது படைப்பரிவின் படை தளபதி மேஜர் ஜெனரல் எல்.எம்.முதலிஹே அவர்களும் கலந்து கொண்டார்.

ஆதன்படி 24 ஆவது படைப்பரிவின் படை தளபதி அவர்களால் 10,000/= க்கு பெறுமதியான அச்சு புத்தகங்கள் உகண பிரதேசத்தின் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பகிர்ந்தளிக்கப்பட்டது.

கொழும்பு நடமாடும் சேவை மற்றும் அம்பாறை ரொட்டரி சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டது.

url clone | Nike