Header

Sri Lanka Army

Defender of the Nation

10th May 2018 16:18:07 Hours

யாழ் பூப்பந்து விளையாட்டின் இறுதி போட்டி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பூப்பந்து விளையாட்டின் இறுதி போட்டியானது இப் படைத் தலைமையகத்தின் உடற்பயிச்சிகூடத்தில் கடந்த (04) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம் பெற்றது.

நீண்ட காலத்துக்கு பின் ஏற்பாடு செய்யப்பட்டு இவ் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட இப் படைத் தலைமையகத்துக்கு கீழ் இயங்கும் அனைத்து படைப் பிரிவுகளின் சேவையில் இருக்கும் படை வீரர்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

523 ஆவது படைப்பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட இப் பூப்பந்து விளையாட்டு போட்டியில் இரண்டு பிரிவுகள் (ஒற்றை மற்றும் இரட்டையர்) 18 வயதுக்கு மேல் மற்றும் 40 வயது எல்லையின் கீழ் 28 அணிகள் போட்டியிட;டனர்.

ஆதன் படி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி 5 ஆவது இலங்கை இராணுவ காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் எம்.ஏ.எஸ் ஜயதிலக (18 வயது) இப் போட்டியில் வெற்றிப் பெற்றதோடு இரண்டாவது இடத்தில் இலங்கை பொலிஸ் படையணியின் லெப்டினென்ட் டபில்யூ.ஆர். எஸ் வீரவத்தன பெற்றுக் கொண்டார்.

அதேபோல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான வெற்றியாளர்கள் கெமுனு ஹேவா படையணியின் மேஜர் கே.எம்.ஜீ.எஸ் கொடிதுவக்கு மற்றும் இலங்கை காலாட் படையணியின் மேஜர் பி.ஏ.ஏ.என்.எம்.எஸ்.கே வீரசிங்க மற்றும் 2ஆவது (தன்னார்வ) இலங்கை காலாட் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை காலாட் படையணியின் மேஜர் ஏ.ஜீ.என் தனசிறி அவர்கள் இக் குழுவில் இரண்டாவது இடத்தில் வெற்றிப் பெற்றார்.

அதேபோல் 40 வயதுக்குள் தனி போட்டி குழுவினர்களில் மேஜர் பி.ஏ.ஏ.என்.எம்.எஸ்.கே வீரசிங்க அவர்களும் 4 ஆவது பொலிஸ் ஹேவா படையணியின் லெப்டினென்ட் கேர்ணல் ஆர்.ஐ ஹன்னானஹாராச்சி அவர்கள் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டதுடன் 40 வயதுக்குள் இரட்டையர் போட்டி குழுவினர்களில் கெமுனு ஹேவா படையணியின் லெப்டினென்ட் கேர்ணல் பி.என் மதநாயக அவர்கள் வெற்றிப் பெற்றதுடன் பொறியியல் சேவைப் படையணியின் மேஜர் ஐ.ஜீ ஹெட்டியாராச்சி மற்றும் 5 ஆவது பொறியியல் சேவைப் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தி பொறியியல் சேவைப் படையணியின் மேஜர் என்.பி.சி.என் குனசேன இரண்டாவது இடத்தில் வெற்றிப் பெற்றார்.

இப் போட்டி நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி பிரதான அதிதியாகவும் 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுஹே மற்றும் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன அவர்கள் விஷேச அதிதியாக கலந்து கொண் டார்கள்.

இப் போட்டியானது அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான நட்பை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் அவர்களின் திறமைகளை தேசிய மட்டத்திற்கு எதிர்காலத்தில் எதிர்கொள்வதற்காகவும், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி ஏற்பாடு செய்யப்பட்டது.

யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தளபதி மற்றும் அனைத்து படைப் பிரிவுகளின் கட்டளை தளபதிகளினால் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இப் போட்டி நிகழ்விற்கு அதிகமான இராணுவ படையினர்கள் பங்கேற்றனர்.

Sport media | Nike Shoes