Header

Sri Lanka Army

Defender of the Nation

09th May 2018 19:32:49 Hours

இராணுவ ஆண் , பெண்களுக்கான ஹொல்வ் விளையாட்டு போட்டிகள்

2018 ஆம் ஆண்டிற்கான இராணுவ ஆண், பெண் பாதுகாப்பு சேவை ஹொல்ப் போட்டிகள் மே மாதம், 7-8 ஆம் திகதிகளில் நுவரேலியா ஹொல்ப் மைதானத்தில் இடம்பெற்றன.

இந்த போட்டிகள் ஹொல்ப் சங்கத்தின் தலைவர் இராணுவ தளபதி அவர்களின் வழிக் காட்டலின் கீழ் இடம்பெற்றன.

இந்த போட்டிகளின் ஆரம்ப நிகழ்விற்கு அதிதிகளாக மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன மற்றும் மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் வருகை தந்து அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

இராணுவ பெண்களின் அணியின் லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.ஏ.சி.ரத்னாயக அவர்கள் திறமையாக விளையாடி சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த இறுதிச் சுற்று நிகழ்விற்கு பிரதம அதிதியாக மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்கள் வருகை தந்து வெற்றியாளர்களுக்கு பரிசினையும் வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் முப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள், ஹொல்வ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

Nike footwear | New Releases Nike