Header

Sri Lanka Army

Defender of the Nation

04th May 2018 19:27:32 Hours

கிளிநொச்சி மாணவர்களுக்கு ஜூடோ விளையாட்டு பயிற்ச்சி பட்டறை

கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலை விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு ஜூடோ விளையாட்டு பயிற்ச்சி விழிப்புனர்வு நிகழ்வு கடந்த ஏப்பரல் மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வானது 57 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் வழிக்காட்டலின் மற்றும் பூர்ண கண்காணிப்பில் இடம் பெற்றது.

இந் இரண்டு நாள் பயிற்ச்சிக்காக 70 க்கும் அதிகமான விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டதுடன் இலங்கை இராணுவ ஜூடோ கழகத்தின் ஆலோசகரான சாஜன் டி.எஸ்.ஜி.டி.எஸ் பரகடுவ மற்றும் கோப்ரல் ஜி.எஸ்.ஏ.ஏ.வி ஷான் பந்து, மற்றும் இராணுவ மகளிர் வீராங்கனை ஷானிக்கா மற்றும் வீராங்கனை வி.ஜே.எஸ்.எச் குமாரி அவர்களால் இப் பயிற்ச்சி நடத்தப்பட்டது.

இந் பயிற்ச்சிக்கு கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி திரு.மோகனதாஸ் அவர்களால் இந்த பயிற்ச்சி பட்டறை வேலைகள் ஒழுங்கமைக்கப்பட்டது.

Running Sneakers Store | UK Trainer News & Releases