Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd May 2018 19:31:40 Hours

பாதுகாப்பு சேவை கல்லூரி மாணவ மாணவிளுக்கு ஊக்குவிப்பு

இராணுவத் தளபதியான லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் பொது சாதாரணதர பரிட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற கொழும்பு பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் உட்பட ஒரு மாணவனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அண்மையில் பாதுகாப்பு சேவை கல்லூரியில் சா.பொ. தராதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவிகளான சரங்க மல்சான் விதானபதிரன, டப்ள்யூ.எஸ்.எஸ் பெர்ணான்டோ, எம்.டீ.சி விஜயசூரிய மற்றும் சாமோட் இரங்கிகா தென்னகோன் போன்ற மாணவ மாணவிகளுக்கு இந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இராணுவ தளபதியின் சந்திப்பின் போது, இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிக்கா சேனாநாயக்க அவர்களினால் மாணவ மாணவிகளுக்கு ஊக்கிவிக்கும் முகமாக நிதி அன்பளிப்பு செய்யப்பட்டன.

இராணுவத்தின் தளபதி இந்த மாணவிகளிடன் உரையாடும்போது நன்கு படிப்பதற்கும் எதிர்காலத்தில் பிரகாசிக்கவும் சிறந்த முடிவுகளை எடுக்கும்படி அவர்களை வலியுறுத்தினார்.

மேலும் கல்வித் தேவைகளைப் பற்றி விசாரித்து அதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் இராணுவ தளபதி தெரிவித்தார். அத்துடன் இந்த மாணவ மாணவிகளின் கல்வி தராதரத்தை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்கிய கல்லூரி நிர்வாக சபைக்கும் நன்றியை தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக, பாடசாலை அதிபர் திருமதி தம்மிகா ஜயனெட்டி, உப அதிபர் லெப்டினன்ட் கேர்ணல் நலிந்த மஹாவிதான அவர்களும் கலந்து கொண்டார்கள்.

Sportswear Design | Gifts for Runners