Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd May 2018 19:00:40 Hours

மரணித்த படை வீரர்களை நினைவு படுத்தும் மாதம்

2018 ஆம் ஆண்டிற்கான மரணித்த படை வீரர்களை நினைவு படுத்தும் இம் மாத ஆரம்ப நிகழ்வு (2) ஆம் திகதி சனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றன.

ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேகா அம்மையாரினால் முதலாவது ரணவிரு கொடியை மேன்மை தங்கிய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவித்தார். அத்துடன் கடந்த வருடத்தில் இந்த கொடிகளின் மூலம் கிடைக்கப்பட்ட நிதிகள் மாகாண ஆளுனரினால் மேன்மை தங்கிய சனாதிபதிக்கு கையளிக்கப்பட்டன. அத்துடன் ஆளுனருக்கும் கொடிகள் அணிவிக்கப்பட்டன.

மே மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் ஜீன் மாதம் 2 ஆம் திகதி வரை கொடி தின வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்விற்கு மேன்மை தங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ராஜாங்க நிர்வாகம் மற்றும் முகாமையாளர், நீதி மற்றும் சாமாதான தொடர்பான அமைச்சர் கௌரவத்திற்குரிய ரஞ்சித் முத்துபண்டா, நாட்டின் அனைத்து மாகாண ஆளுனர்களும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி, முப்படை தளபதிகள் அரச உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

bridgemedia | FASHION NEWS