Header

Sri Lanka Army

Defender of the Nation

01st May 2018 15:55:14 Hours

பரீசூட் பயிற்சிகளை நிறைவு செய்த படையினருக்கு சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வு

குடாஒயா கொமாண்டோ பயிற்சி நிலையத்தில் அடிப்படை பரிசூட் பயிற்சிகளை நிறைவு செய்த 37 இராணுவத்தினர் உற்பட கடற்படை வீரர்களுக்கு பரிசூட் சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கொமாண்டோ பயிற்சி முகாமின் கட்டளை அதிகாரி கேர்ணல் மதுர விக்ரமரத்ன அவர்களது அழைப்பையேற்று விஷேட படையணி மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன அவர்கள் வருகை தந்தார்.

எம்.ஜ 17 ஹெலிகொப்டர் மூலம் இந்த பயிற்சியை நிறைவு செய்த படை வீரர்கள் பரிசூட் மூலம் பயிற்சி முகாம் பூமியை வந்தடைந்தனர். விஷேட படையணி, கொமாண்டோ படையணி மற்றும் கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கொமாண்டோ பயிற்சி முகாமின் கட்டளை அதிகாரி கேர்ணல் மதுர விக்ரமரத்ன, லெப்டினன்ட் கேர்ணல் சுமல் விக்ரமசேகர மற்றும் மேஜர் நலின் குலதுங்க கலந்து கொண்டனர்.

Authentic Sneakers | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival