01st May 2018 19:50:06 Hours
62 ஆவது படைப் பிரிவின் கீழ் உள்ள 622 ஆவது படைத் தலைமையகம் மற்றும் 27 ஆவது கஜபா படையணியின் ஒத்துழைப்புடன் ஏபிசி பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் பிரதம அதிகாரி திரு.ஏ.அபாய அதிகாரி அவர்களது அனுசரனையுடன் திருகோணமலை புல்மோட்டை மின்னரல் சென்ட் சிங்கள கல்லூரி வளாகத்தினுள் 325,000/= பெறுமதி மிக்க தண்ணீர் இயந்திரம் அமைக்கப்பட்டன.
மத்திய மாகாணத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய்கள் (CKD) ஏற்படுவதால், குடிநீரின் மாசுபாடு காரணமாக குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என்று அரசு அறிவித்தல் விடுத்துள்ளன. இதன் பிரகாரம் இலங்கை இராணுவத்தினர் மற்றும் இராணுவ பொறியியலாளர்கள் படையணியின் ஒத்துழைப்புடன் இந்த தண்ணீர் இயந்திர பம் வழங்கப்பட்டன.
கடந்த வெள்ளிக் கிழமை (27) ஆம் திகதி இந்த தண்ணீர் இயந்திர பம் இந்த பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்வொன்றின்றை நடத்தி அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு 612 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி, 62 ஆவது படைப் பிரிவின் சிவல் ஒருங்கிணைப்பு அதிகாரி, 2 ஆவது கஜபா படையணியின் இராணுவ அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அழைப்பாளர்கள் வருகை தந்தனர்.
பாடசாலையின் குடிநீர் பற்றாக்குறை இராணுவத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் வழிக்காட்டலின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டன.
Authentic Nike Sneakers | Nike