Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd May 2018 18:28:31 Hours

இராணுவத்தினரின் பங்களிப்புடன் பிங்கிரியவில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் வெசாக் தினத்தை முன்னிட்டு திறந்து வைப்பு

பிங்கிரியவில் 2018 க்கான தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு மதிப்புக்குறிய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பிங்கிரிய தேவகிரி ரஜமகா விகாரை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடம் (28) ஆம் திகதி சனிக் கிழமை திறந்து வைக்கபட்டது.

இந்த தேசிய தினத்தை கொண்டாடும் முகமாக மேற்கு பாதுகாப்பு படைப்பிரிவின் பொறியியலாளர் சேவை படையணியனரால் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் பிங்கிரிய தேவகிரி ரஜமகா விகாரை வளாகத்தில் புதிய தர்மசாலா (பிரசங்க கூடம்) மற்றும் அனைத்து புனரமைப்பு நிர்மாணிப் பணிகளும் மேற்கொண்டனர்.

பிங்கிரியாவில் 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய வெசாக் விழாவை நினைவுகூறும் வகையில் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களின் பூர்ண ஓத்துழைப்புடன் புத்தசாசன அமைச்சினதும் ஏனைய பங்குதாரர்களின் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இக் கட்டிடம் 142 அடி நீளமும் 68 அடி அகலமும் கொண்டு புதிய பிரசங்கக் கூடம் ஒரே நேரத்தில் 1000 பக்தர்களை வசதியாகக் ஒன்று கூடவதற்கும் வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட;டுள்ளது.

ஆதற்கமைய பிங்கிரியவுக்கு பயணத்தை மேற் கொண்ட இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் கடந்த தினங்களில் இந்த தேசிய தினத்திற்காக இராணுவத் பங்களிப்பும் முன்னேற்றம் பற்றியும் நிர்மாண பணிகள் சம்பந்தமாக அதிகாரிகள் மற்றும் அனைத்து பொறியியல் படையினர்களுடன் கலந்துரையாடல் செய்தார்.

இக்கட்டுமானப் பணியானது இந்த விகரையின் பௌத் தேரரான மல்லகன அத்தடஸி நயாக தேரர் அவர்களினால் இராணுவ தளபதிக்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அவர்களால் இக் கட்டுமான பணிகள் மேற் கொள்ளப்பட்டது. இராணுவ தளபதியவர்களின் ஆலோசனைக்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14 ஆவது படைப்பிரிவின் 143 ஆவது படைப்பிரிவின; பொறியியலாளர்களினால் இக் கட்டுமானப் பணி வெசாக் தினத்துக்கு முன்னர் கட்டியெழுப்பட்டது.

ஆதனைத் தொடர்ந்து மதிப்புக்குறிய ஜனாதிபதி அவர்களால் (28)ஆம் திகதி சனிக் கிழமை புதிய பிரசங்க திறந்து வைக்கபட்டது.

இப்பணிகளில் 1 ஆவது பொறியியளாலர் படையினர், விஜயபாகு காலாட் படையினர் மற்றும் இலங்கை தேசிய காவற் படையினர்களின் ஒத்துழைப்புடன் மறுசீரமைப்பு வேலைகளும் கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

வடமேல் மாகாண குருநாகல் மாவட்டத்திலுள்ள பிங்கிரிய தேவகிரிய ரஜமகா விகாரையானது இலங்கையில் மிகவும் பழமையான பௌத்த கோவில்களில் ஒன்றாகும். இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்ளது.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களின் மேற்பார்வையில் 143 ஆவது படைப்பிரிவின்; கட்டளை தளபதி பிரிகேடியர் பாலித்த பெரேரா அவர்களின் தலைமையின் கீழ் இத் திட்டம் நடைப் பெற்றது.

மேலும், 143 படைப் பிரிவின் படையினர்களால் பிங்கிரிய வெசாக் நிகழ்விற்கு அனைத்து நடவடிக்கையும் வசதிகளும் வழங்கப்பட்டது.

இந்த கலாச்சார நிகழ்விற்கு பௌத்த மதகுருமார்களும் பௌத்த சங்கத்தினர்,மற்றும் அனைத்து பௌத்த தலைவர்களும் முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகளும் பௌத்த மக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

Sports brands | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf