28th April 2018 13:19:04 Hours
மின்னேரியா காலாட் பயிற்ச்சி நிலையத்தில் பல பயிற்ச்சிகளை பெற்று வெளியேறும் அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு அணிவகுப்பு மற்றும் உத்தியோகபூர்வ சின்னம் வழங்கி வெளியேறும் நிகழ்வு மின்னேரியா காலாட் பயிற்ச்சி நிலையத்தில் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுராஜ் பன்ஸஜயா அவர்களின் ஆலோசனைக்கமைய (27) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம் பெற்றது.
இத் திகதியில் படையணி ஆயூத பயிற்ச்சி இல 74 இல் அதிகாரிகள் 36 பேரும், படையணி ஆயூத சிரேஷ்ட ஆணைச்சீட்டு அதிகாரி பயிற்ச்சி இல 83 ஆணைச்சீட்டு அதிகாரிகள் 34 பேர்களும், ஏவுகண் பயிற்ச்சி இல 50 அதிகாரிகள் 10 பேர்களும், 41 படையினர்களும் இப் பயிற்ச்சியின் உத்தியோகபூர்வ சின்னங்களை பெற்று வெளியேறினர்.
இந் நிகழ்வுக்கு பிரதான அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வல கலந்து கொண்டதோடு இப் பயிற்ச்சியில் திறமையான வீரருக்கு வெற்றி கிண்ணம் அவர்களால் வழங்கப்பட்டது.
இத் பயிற்ச்சியல் அதிகாரிகளுக்கான படையணி ஆயூத பயிற்ச்சி இல 74 இல் விஜயபாகு காலாட படையணி லெப்டினென்ட் கே.ஜீ.ஜே கருணாரத்ன திறமையான அதிகாரியாகவும், ஏவூகண் பயிற்ச்சி இல 50 அதிகாரிகள் பயிற்சியில் தேசிய பாதுகாப்பு படையின் 2 லெப்டினென்ட எம்.பி.பி.யு முதுநாயக அவர்களுக்கும், படையணி ஆயூத சிரேஷ்ட ஆணைச்சீட்டு அதிகாரி பயிற்ச்சி இல 83 ஆணைச்சீட்டு அதிகாரிகளில் திறமையான வீரராக சாஜன்ட் கே.எம்.எஸ் குமார ரத்ன அவர்களுக்கும் சான்றிதல் மற்றும் வெற்றி கிண்ணமும் வழங்கப்பட்டது.
buy footwear | Nike Running