Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd April 2018 19:18:28 Hours

வட்டகச்சி பிரதேசத்தில் புத்தாண்டு நிகழ்வுகள்

மலர்ந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் 573 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் ஜானக ரணசிங்க அவர்களின் ஆலோசனைக்கமைய இப் படைப்பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்வானது வட்டகச்சி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த (17) ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம் பெற்றது.

இப் புத்தாண்டு நிகழ்விற்கு பிரதான அதிதியாக 57 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விஜத ரவி பிரிய கலந்து கொண்டார்.

இப் புத்தாண்டு நிகழ்வில் ஆரம்பமாக மங்கள விளக்கேற்றலின் பின் புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டுகளுடன் மேலும் பல வேடிக்கையான நிகழ்வும் இசை நிகழ்ச்சியையும் இடம் பெற்றதில் 1000 க்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் படையினர்களும் பங்கு பற்றினர்.

இந் நிகழ்விட்கு 57 ஆவது படைப் பிரிவுக்கு கீழ் இயங்கும் அனைத்து கட்டளைத் தளபதிகள் மற்றும் பல இராணுவ அதிகாரிகளும் படையினர்களும் கலந்து கொண்டனர்.

latest jordan Sneakers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092