Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd April 2018 19:41:19 Hours

622 ஆவது படைப்பிரிவினரின் புத்தாண்டு நிகழ்வுகள்

சிவிலியன் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்தும் நோக்குடன் பதவிய பராக்கிரமபுர கெழம்பவெவ பிரதேசத்தில் அமைந்திருக்கும் 62 ஆவது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 622 ஆவது படைப்பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வானது கடந்த ( 7 ) ஆம் திகதி சனிக் கிழமை இப் படைத் தலைமையக வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

இப் புத்தாண்டு நிகழ்வில் சிங்களம் மற்றும் தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளுடன் மேலும் பல வேடிக்கையான நிகழ்வும் இசை நிகழ்ச்சியையும் இடம் பெற்றதில் பொதுமக்கள் மற்றும் 622 ஆவது படைப்பிரிவின் அனைத்து படையினர்களும் பங்கு பற்றினர்.

இப் புத்தாண்டு நிகழ்விற்கு பிரதான அதிதியாக 622 ஆவது படைப்பிரிவின் படையதிகாரியும் இந் நிகழ்வின் பிரதான அதிகாரியான கேர்ணல் சாலிய அமுனுகம அவர்களின் அழைப்பை ஏற்று 62 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சஞ்ஜய வனிகசிங்க வருகை தந்ததுடன் இந் நிகழ்விற்கு இராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

buy shoes | Air Jordan Release Dates Calendar