Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd April 2018 20:09:57 Hours

59 ஆவது படைப் பிரிவினரால் புத்தாண்டு நிகழ்வுகள்

59 ஆவது படைப் பரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வானது (18) ஆம் திகதி முல்லைத்தீவு பிரதேசத்தின் முள்ளியாவலை வித்தியநந்த வித்தியாலய மைதானத்தில் கொண்டாடப்பட்டது.

இப் புத்தாண்டு நிகழ்வானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் ஆலோசனைக்கமைய 59 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ருவன் வனிக சூரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் சம்பிரதாய பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றது.

அந்த வகையில் சகோதரத்துவம் , நல்லிணக்கம் மற்றும் இன ஒற்றுமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கொண்டாடிய இப் புத்தண்டு நிகழ்விற்கு முல்லைத் தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு மற்றும் 68 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எச் .ஆர்.எம் பெர்ணாந்து உட்பட முல்லைத்தீவு முன்நோக்கு பராமரிப்பு பகுதியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சீ.எஸ் எடிபொல, 59ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ருவன் வனிக சூரிய அவர்கள் முல்லைத் தீவின் பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் அதிகாரி வசந்த கந்தேவத்த, மற்றும் அரசாங்க அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர்கள் உட்பட முல்லைத்தீவு பிரதேசத்தின் சிவில் மக்களும் கலந்து கொண்டார்கள்.

இந் நிகழ்வில் சைக்கில் ஓட்டம், இராணுவ நாய்களின் கண்காட்ச்சி. கிராமத்து நடனங்கள் விநோத விளையாட்டுக்கள் விஷேட நடனங்கள் மற்றும் சங்கீத இசை நிகழ்ச்சியும் இந் நிகழ்ச்சியை வர்ணமயமாக்கியதுடன் இப் போட்டிகளில் பங்கு பற்றிய முல்லைத்தீவு சிவில் மக்களுடன் 150 க்கும் மேற்பட்ட போற்றியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இப் புத்தாண்டு பேற்றிகளில் பங்கு பற்றி வெற்றிப்பெற்ற அனைவருக்கும் முல்லைத் தீவு மாவட்ட செயலாளர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் அனைத்து அதிகாரிகளினால் பரிசுகள் வழங்கப்பட்டது.

affiliate link trace | THE SNEAKER BULLETIN