17th April 2018 14:48:08 Hours
மேஜர் ஜெனரல் பயாஸ் ஹூசைன் ஷா அவர்களின் தலைமையின் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழககள்தின் 21 பேர்களை கொண்ட குழுவினர் இந் நாட்களில் இலங்கையில் சுற்றுலா பயணத்தை மேற் கொண்ட அவர்கள் இராணுவ தளபதியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவ பதிவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களை கடந்த (16)ஆம் திகதி திங்கட் கிழமையன்று இராணுவ தலைமையக காரியாலயத்தில் சந்தித்தனர்.
பாகிஸ்தான்; தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகதின் தேசிய பாதுகாப்பு மற்றும் யுத்த சம்பந்தமான பாடநெறியை முடித்த பாக்கிஸ்தான் ராணுவம் மற்றும் சிவில் சேவை சிரேஷ்ட அதிகாரிகள், சவுதி அரேபியா இராச்சியம் மற்றும் சீனா இதில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் மேஜர் ஜெனரல் பயாஸ் ஹூசைன் ஷா அவர்கள் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகதின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சினைகள, அறிவுசார் திறன் மற்றும் இராணுவ முக்கியத்துவம் போன்றவை பல வகையான கருத்துக்களும் கலந்துரையாடப்பட்டன. அழைப்பின் பேரில் வருகை தந்த மேஜர் ஜெனரல் பயாஸ் ஹூசைன் ஷா இராணுவ தளபதிக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பின் முடிவில் இராணுவ தளபதியவர்களின் ஆலோசனைக்கமைய இராணுவ பதிவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து மற்றும் மேஜர் ஜெனரல் பயாஸ் ஹூசைன் ஷா அவர்கள இருவருக்கும் இடையில் நினைவுசின்னங்கள் பரிமாறப்பட்டனர்.
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகதின் குழுவினர், மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் கடற்படைத் தளபதி விமானப் படைத் தளபதி மற்றும் சிவில் பாதுகாப்பு பரிவினர்களும் இந் சந்திப்பல் கலந்து கெதண்டனர்.
Sport media | Gifts for Runners