Header

Sri Lanka Army

Defender of the Nation

16th April 2018 19:51:50 Hours

கொமண்டோ படையணியில் சிறப்பான போர் பயிற்ச்சியை முடித்து வெளியேறிய 54 இராணுவ வீரர்கள்

மன்னார் வெடிதலதீவின் அமைந்துள்ள கொமாண்டோ படையணியின் விஷேட பயிற்ச்சி முகாம்மில் மூன்றாவது தடவையாக இப் படையணியின் ஏற்பாட்டின் சிறப்பான போர் பயிற்ச்சியை முடித்து வெளியேறும் நிகழ்வு கடந்த (11) ஆம் திகதி பயிற்ச்சி முகாம் வளாகத்தில் இடம் பெற்றது. இப் பயிற்ச்சியில் வெடிவைத்தல் மற்றும் துப்பாக்கியை பாதுகாப்பாக கையாழுதல் போன்ற பல வகையான பயிற்ச்சிகள் வழங்கப்பட்டன.

கொமாண்டோ படையணியின் விஷேட பயிற்ச்சி முகாம்மின் கட்டளை அதிகாரியான லெப்னென்ட் கேர்ணல் ஆர்.எஸ்.சி திசாநாயக அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்ற இந் விஷேட பயிற்ச்சிநெறியில் சான்றிதல் வழங்கும் நிகழ்விற்கு பிரதான அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா கலந்து கொண்டார்.

இந்த பயிற்ச்சிநெறியில் 04 அதிகாரிகள் மற்றும் 50 படையினரும் கலந்து கொண்டனர். இப் பயிற்ச்சியில் வெடிவைத்தல் மற்றும் தற்பாதுகாப்பு போன்றவை இடம் பெற்றது. இந்த பயிற்ச்சிநெறியில் கொமாண்டோ பயிற்றுப்விப்பாளகளின் ஒத்துழைப்பும் இலங்கையின் பாரம்பரிய தற்காப்புக் கலைப் போரில் பயிற்சி பெறவும் உதவியது.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் கொமாண்டோ பயிற்றுப்விப்பாளர்களின் ஒத்துழைப்புடன் பயிற்ச்சியின் எவ்வாறு கையாழ்வது பொறிவைத்தல் பூமியில் வெடிவைத்தல் போன்றவை காட்ச்சி படுத்தப்பட்டன.

ரிதிகாலா திருமதி சுமேதா அவர்களினால் வரலாற்றில் ஒரு மதிப்பு வாய்ந்த விரிவுரை நடாத்தப்பட்டது. மற்றும் போரினைக் குறைப்பதற்காக பண்டைய இலங்கை தற்காப்புக் கலை கருத்துக்களின் நியாயத்தன்மையில் அதன் வரலாற்றில் ஒரு மதிப்பு வாய்ந்த விரிவுரை நடத்தினார்.

இந் கண்காட்ச்சியில் போது கொமாண்டோ படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஆர்.பி.டி.யூ ராஜபக்க்ஷ மற்றும் கொமாண்டோ படை தலைமையகத்தின் பிரிகேடியர் ஏ.கே.ஜீ.கே.யு குனரத்ன மற்றும் 62 ஆவது படைப் பரிவின் கட்டளை தளபதி மற்றும் பிரிகேடியர் சஞ்ஜய வனிகசிங்க மறறும் 21 ஆவது படைப் பரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் சில்வா மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் போனறோர்களால சான்றிதள்கள் பகிர்ந்தளிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் பிரதான அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களால் இப் பயிற்ச்சியின் திறமையான வீரர்களுக்கு சான்றிதல் மற்றும் வெற்றி கிண்ணமும் வழங்கப்பட்டது. 7 வது இலங்கை சிங்க படையணியின் லான்ஸ் Nகாப்ரல் யுல்டி விஜேந்திர திறமையான வீரராக வெற்றி கிண்ணமும் சான்றிதழையும் பெற்றுக் கொண்டார். 19 வது விஜயபாகு காலாட்படைப் படைப்பிரிவின் கேப்டன் டி.டிஎம்.ஜே.எல். தயானந்தா திறமையுடையவராகவும் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள ரிதிகல நிறுவனத்தின் திருமதி சுமேத மற்றும் கட்டளை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Best Authentic Sneakers | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!