16th April 2018 20:07:04 Hours
ஐக்கிய நாட்டு இராணுவ பசிபிக் திட்டத்திற்காக (Land Forces Pacific Programme) இலங்கைக்கு வருகையை மேற் கொண்ட ஐக்கிய நாட்டு இராணுவ பசிபிக் திட்டத்தின் 17 அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாட்டு காரியாலயத்தின் 04 அதிகாரிகள் குழுவினர்கள் இராணுவ தளபதியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவ பதிவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களை கடந்த (16)ஆம் திகதி திங்கட் கிழமையன்று இராணுவ தலைமையக காரியாலயத்தில் சந்தித்தனர்.
அதே போல் அவுஸ்ரேலிய ஐக்கிய நாட்டு வடக்கு தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான அவுஸ்ரேலிய இராணுவத்தின் மேஜர் ஜெனரல் ரொஜர் ஜே. நோபெல் அவர்களின் தலைமையில் அந்த படைத் தலைமையகத்தின் இராணுவ அதிகாரிகள் கடந்த (16) ஆம் திகதி பண்டாரநாயக ஞாபகார்த் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற ஐக்கிய நாட்டு இராணுவ பசிபிக் திட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்டு போது இராணுவ பதிவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது ஐ.ந பங்குதாரர்களின் ஐந்து வருடம் திட்டம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சினைகள, அறிவுசார் திறன் மற்றும் இராணுவ முக்கியத்துவம் போன்றவை பல வகையான கருத்துக்களும் கலந்துரையாடப்பட்டன. அழைப்பின் பேரில் வருகை தந்த மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே. நோபல் இராணுவ தளபதிக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பின் முடிவில் இராணுவ தளபதியவர்களின் ஆலோசனைக்கமைய இராணுவ பதிவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து மற்றும் மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே. நோபல் இரவருக்கும் இடையில் நினைவுசின்னங்கள் பரிமாறப்பட்டனர்.
2017 ம் ஆண்டு நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே. நோபல் கலந்து கொண்டார்.
பண்டாரநாயக ஞாபகார்த் சர்வதேச மாநாட்டு சந்திப்பில் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தனந்தி கருணாரத்ன, மேஜர் ஜெனரல் அருணா வன்னியாராச்சி, வெளிவிவகார செயலாளர் மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர்.
Asics shoes | Marki