Header

Sri Lanka Army

Defender of the Nation

16th April 2018 18:40:09 Hours

மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் துணை பதவி நிலை அதிகாரியாக பதவியேற்பு

விஜயபாகு காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் அஜத் காரியகரவன அவர்கள் புதிய துணை பதவி நிலை பிரதாணியாக கடந்த (16) ஆம் திகதி திங்கட் கிழமை அவரது தலைமையக கார்யாலயத்தில் பௌத்த மத வழிபாடுகளுடன் உத்தியோகபூர்வ ஆவணங்களை கையொப்பமிட;டு பதவி பொறுப்பேற்றார்.

மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் புதிய துணை பதவி நிலை பிரதாணியாக பதவிக்கு முன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியாக கடமையாற்றினார். இக் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் வாழ்கை சம்பந்தமான விரங்கள் பின் வருமாறு

மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் கொழும்பு 07 இல் அமைந்துள்ள ரோயல் கல்லூரியில் தனது பாடசாலை கல்வியை நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் கெடற் அதிகாரியாக இணைந்து தியத்தலாவ இலங்கை இராணுவ பயிற்ச்சி முகாம்மில் அடிப்படை கெடற் அதிகாரி பாடநெறியை இலக்கம் 18 யு நிறைவு செய்தார். அதன் பின் அவர் இரண்டாவது லெப்டினெனாக கடமையை பொறுப்பேற்று 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியில் நியமிக்கப்பட்டர்.

மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் தேசிய பாதுகாப்பு, மனிதவள முகாமைத்துவம், ஆயுதம் மற்றும் ஆயுதம் இல்லாத பயிற்சி, மனிதாபிமான அவசர நிவாரண சேவைகள், அனர்த்த ஆபத்து, இளைஞர் அபிவிருத்தி, நிர்வாகம் மற்றும் இராணுவ தளவாடங்கள் போன்ற நடவடிக்கைளுக்கு முதன்மைதுவம் வகித்துள்ளார்.

இவர் கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி உட்பட பல படைத் தலைமையங்களான 61 ஆவது ,55 ஆவது மற்றும் 68 ஆவது போன்ற படைப் பரிவுகளில் கட்டளை தளபதியாக பதவி வகித்தார். அதே போல் 217 ஆவது 212 ஆவது மற்றும் 233 ஆவது படைப் பரிவுகளில் கட்டளை தளபதியாக பதவி வகித்துள்ளார். 6ஆவது விஜயபாகு படையணி மற்றும் இராணுவ தலைமையகம்கத்திலும் கட்டளை அதிகாரியாகவும் ஹைட்டியிலுள்ள ஐ.நா அமைதிகாக்கும் படையிலும் கட்டளை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.

இவர் பங்களதேஸம் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பட்டதாரியகவும் வியட்னம் தேசிய பாதுகாப்பு சிரேஷ்ட அதிகாரியாக பயிற்ச்சியும் பெற்றுள்ளார்.

மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் சிறந்த சேவையாற்றி உத்தம சேவை பதக்கமும் பெற்றுள்ளதோடு திறமையான விளையாட்டு வீரராகவும் குத்துச் சண்டை மற்றும் ரக்பி போன்ற விளையாட்டுக்களுக்காக தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு மிக ஆர்வம் காட்யுள்ளார்.

இவர் திருமதி அனுஜா காரியகரவனவுடன் திருமணம் செய்து கொண்டார்.

jordan release date | Air Jordan