Header

Sri Lanka Army

Defender of the Nation

11th April 2018 11:35:06 Hours

தம்புள்ள இயந்திர காலாட் படையணியில் புத்தாண்டு நிகழ்வுகள்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தம்புள்ள ஹல்மில்லேவ பிரதேசத்தில் அமைந்திருக்கும் இயந்திர காலாட் படையணி தலைமையகத்தில் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர்களின் ஒத்துழைப்புடன் சம்பிரதாய முறைப்படி பல விளையாட்டுகள் மற்றும் புதுவருட கலாச்சார நிகழ்வுகளும் (09)ஆம் திகதி திங்கட் கிழமை தம்புள்ள ஹல்மில்லேவ வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றன.

இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக வன்னிப் பாதுகாப்பு படைத் தளபதியும் இயந்திர காலாட் படையணி தலைமையகத்தின் கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்த புத்தாண்டு நிகழ்வானது இப் படைத் தளபதியான கேர்ணல் உதய ஹேரத் அவர்களின் ஆலோசனைக்கமைய பிரதி பாதுகாப்பு கட்டளை தளபதியான லெப்டினென்ட் கேர்ணல் குமார வனசிங்க அவர்களின மேற்பார்வையின் கீழ் இப் படைத் தலைமையகத்தின் படையினர்களின் ஒத்துழைப்புடன் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் மரதன் ஓட்டம்,சைக்கிலோட்டம், கயிறுலுத்தல் மற்றும் அலகு இராணி தேர்தெடுத்தல் உட்பட பல சம்பிரதாய மற்றும் வினோத விளையாட்டு போட்டிகள் மற்றும் கிராமத்து நாடகங்கள் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.

இந்த புத்தாண்டை சிறபிக்கும் நோக்கமாக இயந்திர காலாட் படையணி தலைமையகத்தின் இசை குழுவினர்களால் வர்ண சங்கீத இசை நிகழ்ச்சி இடம் பெற்றதோடு இந் நிகழ்விற்கு நெஸ்லே லங்கா தனியார் நிறுவனத்தினர் அனுசரனை வழங்கினார்கள்.

இந் நிகழ்வில் இராணுவ படைத் தலைமையகத்தின் ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து அவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர்களுடன் இப் பிரதேசத்தின் சிவில் மக்களும் கலந்து கொண்டார்கள்.

latest Nike Sneakers | Nike